பரிதிமாற்கலைஞர்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்  தமிழுக்குத்  தொண்டாற்றியவர்களுள்  குறிப்பிடத்தக்கவர் பரிதிமாகலைஞர்.சூரியநாராயணசாஸ்திரியார் என்னும் தம் பெயரை பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழாக்கிக்  கொன்டவர். இவர், மதுரையை அடுத்த விளாச்சேரி என்னம் சிற்றூரில் கோவிந்தசிவனார்,இலட்சுமிஅம்மாள் இணையரின  மூன்றாவது மகனாக, 1870ஆம் ஆண்டு சூலை திங்கள் ஆறாம் நாள் பிறந்தார் 

பரிதிமாற்கலைஞரின் பணிகள். 
        பரிதிமாற்கலைஞர்,தந்தை கோவிந்தசினாரிடம் வடமொழியும்  மகாவித்துவான்  சபாபதியாரிடம் தமிழும் பயின்றார். சென்னை  கிறிம்தவக்  கல்லுரியில்.   இளங்கலை  (பி.ஏ.) பயின்றார். இளங்கலை தேர்வில்,தமிழிலும் தத்துவத்திலும் 
பல்கலைக்கழகத்தில் முதல்  மாணவராகத் தேர்ச்சி பெற்றார்
தாம்  பயின்ற  கல்லூரியில்  
தத்துவத்துறை  ஆசிரியர்  பணி 
வழங்கப்பட்டதை  ஏற்காது, 
தமிழ்துறைப்  பணியை  
விரும்பிக்கேட்டு  ஏற்றார். 
தாம்  கற்பிக்கும்
பாடங்களைச் செந்தமிழ்  நடையில் 
சுவைபட  விவரிக்கும்  ஆற்றல்
பெற்றிருந்தார். பிற துறை மாணவர்களும் அவருடைய
வகுப்புக்கு  வந்து  ஆர்வத்துடன்  
பாடங்கேட்டார்கள் 
அவருக்கு  ஆக்சுபோர்டு
பல்கலைக்கழகம் பேராசிரியர் 
பணி வழங்க  முன்வந்தது; ஆனால்
அதனை அவர் ஏற்கவில்லை .
தமிழ் பயிலும்  ஆர்வம் மிக்க
மாணவர்களுக்குத்  தம்முடைய இல்லத்திலேயே  தமிழ் 
கற்பித்ததுடன், அவர்களை  
இயற்றமிழ்  மாணவர்  எனவும் 
பெயரிட்டு  அழைத்தார். மேலும். 
அவர், மாணவர்களுக்குத்
தமிழ் இலக்கிய,  இலக்கணங்களைச்
சுவைபடக் கற்பித்ததோடு  தமிழைச்
சுவைக்கவும்  கற்பித்தார் 

மதுரைத் தமிழ்ச்சங்கம் 
      பரிதிமாற்கலைஞரின்  ஒவ்வொரு
செயலும்  தமிழ்  வளர்ச்சியை  நோக்கியே  அமைந்திருந்தது. மதுரையில்  நான்காம்  தமிழ்ச்சங்கம் 
நிறுவ முயன்றவர்களுள்
இவரும் ஒருவர் பாசுகரசேதுபதி
தலைமையில் பாண்டித்துரை
மேற்பார்வையில்   
பரிதிமாற்கலைஞர், 
உ. வே. சாமிநாதர்,இராகவனார்
ஆகிய  பேராசிரியர்கள்
துணையுடன்  மதுரைத்
தமிழ்ச்சங்கம்  நிறுவப்பட்டது


தமிழ்ப்புலமையும் 
தனித்தமிழ்ப்பற்றும்
        பரிதிமாற்கலைஞர்,தமிழின்
மேன்மையை  தாம் உணர்ந்ததோடு, 
உலகிற்கு உணர்த்துவதிலும்
தலைசிறந்து  விளங்கினார்.
யாழ்ப்பாணம்  சி. வை. 
தாமோதரனார், 
பரிதிமாற்கலைஞரின்  தமிழ்ப்
புலமையையும்  கவிபாடும் திறனையும்  கண்டு, திராவிட சாஸ்திரி என்னும் சிறப்புப்  பட்டத்தை
வழங்கினார். பரிதிமாற்கலைஞர், 
தாம்  இயற்றிய  தனிப்பாசுரத்தொகை   என்னும்
நூலில் பெற்றோர்  இட்ட சூரியநாராயண சாஸ்திரி என்ற
வடமொழிப் பெயரை மாற்றி 
பரிதிமாற்கலைஞர் எனத் தனித்தமிழ்ப் பெயரைச் சூட்டிக்கொண்டார். இந்நூலினை, 
ஜி. யு. போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்
 
பரிதிமாற்கலைஞர்,சென்னைக்
கிறித்தவக் கல்லூரியில்
படித்தபோது கல்லூரி ஆங்கிலப்
பேராசிரியரான அவர் ஒருநாள்,
டென்னிசன் இயற்றிய  ஆர்தரின்
இறுதி என்னும் நூலில் உள்ள ஒரு  பாடலை நடத்தினார். அதில்,  துடுப்புகளை அசைத்துச் செலுத்தப்பட்ட படகானது அழகிய
அன்னப்பறவைக்கு
உவமையாக்கப்பட்டிருந்தது. 
அதனை வியந்து பாரட்டிய மில்லர், 
“இங்கிலீஷ், இங்கிலீஷ்தான்; படகை    நகர்த்தும் துடுப்புகளுக்கு உவமையாகப் பறவைகளின் சிறகைக் கூறியது வெள்ளையர்களின் அபூர்வக் கண்டுபிடிப்பு”என்று பெருமையாகக்
கூறினார். அதுமன்டுமன்றித்
“தமிழில் இதுபோன்ற உவமை ஏதேனும் உண்டோ? ” என்று மாணவர்களிடம் வினவினார்.
அதற்குப் பரிதிமாற்கலை,“பன்னிரண்டாம் 
நூற்றாண்டிலேயே 
கம்பராமாயணம்  குகப்படலத்தில்
இத்தகைய உவமை உள்ளது” என்று
கூறி,‘விடுநனி கடிது’ என்னும் 
அப்பாடலைப் பாடியும் காட்டினார். 
அதனைக் கேட்ட ஆங்கிலப் பேராசிரியர் வியந்து,அவரைப் 
பாராடினார்
     

தமிழின் சிறப்பை  உணர்த்தல்
          
 தமிழ்ச்சொற்களோடு வடமொழிச்சொற்களைக் கலந்து
எழுதுதல், மணியும் பவளமும் கலந்து
கோத்த மாலைபோலாகும் எனத் 
தமிழின் அருமை உணராதோர்
கூறினர் ஆனால், அது தமிழ்மணியோடு பவளத்தைப்போலச் செந்நிறம் 
உடையதான மிளகாய்ப் பழம் கலந்தது போன்ற பயனையே தந்தது
என்பது பரிதிமாற்கலைஞரின்
கருத்து. மணியோடு மிளகாய்
பழத்தையும் கோத்து மலையாக அணிந்தால், சிறுபொழுது செல்லும்
முன்னரே மிளகாப்பழத்தின் தோல்
காய்ந்து, காம்பொடிந்து, விதை
உடம்பிலேபட்டு, வியர்வையோடு
கலந்து பொறுக்கமுடியாத எரிச்சலைத்தான் தரும்; தோல் தடித்து உணர்ச்சி கெடாத எவரும், 
அந்த எரிச்சலை உணர்வர். 
அதனைப்போன்றே தமிழ்த்தாயின் 
எழல் மிகுந்த உடம்பிற்கு, மணிப்பிரவாள நடை எரிச்சலைத்தான் தரும் என்பதனை
உணர்ந்த பரிதிமாற்கலைஞர்,
வடசொற்கலப்பைக்  கண்டிக்கத்
தயங்கவில்லை. 
  
தமிழ்த்தொண்டு

   பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில்
பட்டவகுப்புகளில் தமிழை விலக்கி, 
வடமொழியைக் கொண்வரப் பல்கலைக்கழகத்தாரால் முடிவெடுக்கப்பட்டது.  ஆனால், 
1902ஆம் ஆண்டில் பரிதிமாற்கலைஞரின் உறுதியான
எதிர்ப்பால், பல்கலைக்கழகம் கைவிட்டது. அவரது முனைப்பான
முயற்சி இல்லையென்றால்,
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திலிருந்து தமிழ் அறவே
நீக்கப்பட்டிருக்கும். பரிதிமாற்கலைஞர், ரூபாவதி, கலாவதி முதலிய நற்றமிழ் நாடகங்கள் இயற்றினார்.  அவர் ரூபாவதி, கலாவதி என்னும் பெண்பால் வேடங்களும் புனைந்து
நடித்து நாடகக்கலை வளர்ச்சிகுத் 
துணைபுரிந்தார்; சித்திரக்கவி எழுதும் ஆற்றலைப் பெற்றிருந்ததால், சித்திரக்கவி என்னும் நூலை எழுதினார்
குமரகுருபரரின் நீதீநெறி விளக்கத்தின்  ஐம்பத்தொரு பாடல்களுக்கு உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்
    
        மு.சி பூர்ணலிங்கம் தொடங்கி 
வைத்த ஞானபோதினி   என்னும்
இதழைப் பரிதிமாற்கலைஞர் 
நடத்தினார். பரிதிமாற்கலைஞர் தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் ஆகிய
மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.மாணவப் 
பருவத்திலேயே ஆங்கிலப்பாடல்களைத் தமிழில் 
மொழிபெயர்த்தார். பிற்காலத்தில் 
வடமொழி நூல்களையும் தமிழில்
மொழிபெயர்த்தார்.மதுரைத் 
தமிழ்ச்சங்கத்தாரின் செந்தமிழ்
இதழில்  உயர்தனிச் செம்மொழி
௭ன்னும் தலைப்பில், தமிழின் அருமை  பெருமைகளை விளக்கி
அரியதொரு கட்டுரைவரைந்தார். 
தமிழ்மொழி உயர்தனிச்செம்மொழி
என முதன்முதலாக நிலைநாட்டினார்
   
        தமிழ் உள்ளங்கொண்டு அயராது
தமிழ்த் தொண்டாற்றிய பரிதிமாற்கலைஞர், தமது முப்பத்து
மூன்றாம்  அகவையில்  (02.11.1903)
இயற்கை எய்தினார். நடுவணரசு 
பரிதிமாற்கலைஞருக்கு அஞ்சல்தலை  வெளியிட்டுச் 
சிறப்புச் சேர்த்துள்ளது. நற்றமிழில்
பெயர் சூட்டவும், நற்றமிழின் 
தனிப்பெருமையைக் காக்கவும் உறுதி கொள்வதே பரிதிமாற்கலைஞர் தொண்டுக்கு 
நாம் காட்டும் நன்றிக்கடனாகும்



 






Previous Post Next Post