மாணிக்கவாசகர் பாடல்

வாழ்த்து வாழ்த்து

மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை யார்கழற்கென்  

கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்  

பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றி என்னும் 

பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றி என்னும் 

கைதான் நெகிழ விடேன்உடை யாய் என்னைக் கண்டுகொள்ளே. *

- மாணிக்கவாசகர். 

 பொருள்;

எல்லாம் உடைய பெருமானே! நான் உன்பால் பேரன்பு கொண்டதன்  காரணமாக  உடல்  சிலிர்த்தேன்; உள்ளம் நடுங்கினேன்; நறுமணம் கமழும் உன் திருவடிகளைக் கருத்திற்கொண்டு, தலைமேல் கைகுவித்து வணங்கினேன்; கண்களில் நீர் பெருகுமாறு உள்ளம் வருந்த உருகினேன்; பொய்ப்பொருளை விலக்கி மெய்ப்பொருளாகிய உன்னையே நினைந்து துதித்தேன்; வெல்க வெல்க என உன் அரும்பெரும் செயல்களைப் போற்றிப் புகழ்ந்தேன். இத்தகைய ஒழுக்கத்தை நான் என்றும் கைவிட்டேன்; எனவே, உன் அடியவர்களுள் ஒருவனாக என்னையும் ஏற்று அருள் புரிவாயாக!



 ஆசிரியர் குறிப்பு: 
சைவ சமயக்குரவர் நால்வருள் ஒருவர் மாணிக்கவாசகர். இவர், திருவாதவூரில் பிறந்தவர். இவ்வூர், மதுரைக்கு அருகில் உள்ளது. மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றியவர்; பாண்டியனுக்காகக் குதிரை வாங்கச் சென்றபோது, திருப்பெருந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப் பெற்றவர். அவ்விறைவனை, மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்க அழுது தொழுதவர். இதனால் மாணிக்கவாசகரை, அழுது அடியடைந்த அன்பர் என்பர். 
திருவாசகமும் திருக்கோவையாரும் இவர் அருளியன. அவர் எழுப்பிய கோவில், தற்பொழுது ஆவுடையார்கோவில் என வழங்கப்படும் திருப்பெருந்துறையில் (புதுக்கோட்டை மாவட்டம்) உள்ளது. இவர்தம் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்பர்


திருமுறைகபன்னிரண்டனூ ட்டாம் திருமுறையாக திருவாசகமும் திருக்கோவையாரும் உள்ளன. திருவாசகத்தில் அறமாரற்று ஐம்பத்தெட்டுப் பாடல்கள் இயன் பெற்றுள்ளன. திருவாசகம் கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்யும் அதலால் 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்னும் தொடர் வழங்கலாயிற்று. திரு என்னும் தொடர் வழங்கலாயிற்று பிறப்பை உணர்ந்த ஜி. டி.போப், அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். சிறப்பை உணர்ந்து அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் திருவாசகத்திலுள்ள திருச்சதகத்தின் முதற்பாடல் நம் பாடப்பகுதியாக அமைந்துள்ளது. திரு என்பது, நூலின் சிறப்பை உணர்த்த வந்த அடைமொழி; சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூலை குறிக்கும்


நூற்குறிப்பு:சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் எட்டாம் திருமுறையில் திருவாசகமும்
 திருக்கோவையாரும் உள்ளன. திருவாசகத்தில் அறுநூற்று ஐம்பத்தெட்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவாசகம் கல்நெஞ்சையும் கசிந்துருகச் செய்யுமாதலால், 'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்னும் தொடர் வழங்கலாயிற்று திருவாசகத்தின் சிறப்பை உணர்ந்த ஜி.யு. போப், இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

 திருவாசகத்திலுள்ள திருச்சதகத்தின் முதற்பாடல் நாம்  பார்பது அமைந்துள்ளது. திரு என்பது, நூலின் சிறப்பை உணர்த்த வந்த அடைமொழி; சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூலைக் குறிக்கும்

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post