மகாத்மா காந்தி

   ஆங்கிலேயர்களிடம்  அடிமைப்பட்டிருந்த  இந்திய  நாட்டை  அன்பு  முறையில் போராடி  விடுதலை  கிடைக்க  வழி  வகித்தவர் மகாத்மா காந்தி.  பொய்  கூறாமல் வாழ்ந்து  காட்டியவர். ஒழுக்கத்தையே  உயர்வாகப் போற்றியவர். 
        போர்பந்தர்  என்னும்  ஊரில்  திவானாகப்  பணிபுரிந்தவர் 'கரம்  சந்திர காந்தி ' தெய்வ பக்தியில் சிறந்து  விளங்கினார். அவரது  மனைவியாரின்  பெயர் 'புத்லிபாய் அம்மையார்' அவர்களுக்கு  ஒரு  பெண்  குழந்தையும்,  மூன்று ஆண் குழந்தைகளும் பிறந்தனர் இளைய  மகனாக  காந்தியடிகள் 1869ஆம் ஆண்டு  அக்டேபர்  மாதம்  2ஆம்  நாள் பிறந்தார்.   பெற்றோற்கள் ' மோகன்தாஸ்  கரம்சந்த்  காந்தி ' எனப் பெயர்  சூட்டினார்கள்  போர்பந்தரில்  உள்ள  ஆரம்பப்பள்ளியில்  காந்தி  கல்வி  கற்றார்.  காந்தியின் தாய்மொழியான  குஜராத்தி  மொழியை நன்றாக  கற்றுக்கொண்டார்.  
        இளம் பருவத்திலிருந்தே உண்மை  பேசுதையே உயர்ந்த  பண்பாகக் கொண்டிருந்தார்  காந்தியடிகள்.  சிறு  வயதில்  கல்வி  பயின்ற போது  'சிரவணன்'  எனும்  சிறுவன்  தனது  பெற்றோர்களுக்குக்  காட்டிய  அன்பும்  தொண்டும்  குறித்து  படித்த  பின்பு  தானும்  பெற்றோர்களிடம்  அன்பாக  இருக்க  வேண்டும்  என்றும்  தீர்மானித்தார். 


'அரிச்சந்திரன்' நாடகத்தைப் பார்த்த காந்தியடிகளின் மனதில் மாபெரும் மாற்றமே நிகழ்ந்தது. அரிச்சந்திரனைப் போல உண்மையே பேச வேண்டும் என மனதில் உறுதி செய்தார். காந்தியடிகள் பண்பில் உயர்ந்தவராக இருந்த மைக்கு அரிச்சந்திரா நாடகம் "சிரவண பித்ரு பக்தி நாடகமும் காரணமாக அமைந்தன

காந்தியடிகள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது 'கஸ்தூரிபாய்' என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர்

உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்த காந்தியடிகள் வழக்கறிஞர் தொழிலுக்காக 'பாரிஸ்டர்' படிப்பு படிக்க இங்கிலாந்துக்குச் செல்ல விரும்பினார்

மேல்நாட்டிற்குச் சென்றால் தனது மகனின் ஒழுக்கம் கெட்டு விடும் என பயந்தார் காந்தியடிகளின் தாயார்
ஆனால் காந்தியடிகள் தாயாரிடம் உறுதிமொழி அளித்தார்


மது அருந்தவோ, புலால் உண்ணவோ மாட்டேன். மற்ற பெண்களோடு நெருங்கிப் பழக மாட்டேன் என்றும் உறுதி அளித்தார். இதற்குப் பின்பே காந்தியடிகளின் தாயார் சம்மதம் தெரிவித்தார்.

லண்டனுக்குச் சென்ற காந்தியடிகள் அந்நாட்டினர் போன்றே ஆடம்பர வாழ்க்கை முறையைக் கடைபிடித்தார்.பின்பு ஆடம்பர வாழ்க்கையைத் தவிர்த்து விட்டு எளிய வாழ்க்கையை மேற்கொண்டார். 1891-ஆம் ஆண்டு பாரிஸ்டர் தேர்வில் வெற்றி பெற்றார்

லண்டனில் இருந்து இந்தியா வந்தபின்பு ராஜ்கோட் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார்.



தென்னாப்பிரிக்காவில்  உள்ள வணிகருக்கு வாதாடுவதற்காக தென்னாப்பிரிக்கா சென்றார். டர்பன் என்ற நகரிலிருந்து பிரிடோரியாவிற்குப் புகைவண்டியில் முதல் வகுப்பில் ஏறிப் பயணம் செய்து கொண்டிருந்தார்
இதைக்கண்ட வெள்ளையன் ஒருவன் காந்தியை கீழ் வகுப்புப் பெட்டிக்குச் செல்லுமாறு கூறினார்.

காந்தியடிகள் தான் முதல் வகுப்பு பயணச்சீட்டு வாங்கியிருப்பதைக் காட்டினார். வெள்ளையன் கோபத் தோடு ரயில்வே ஊழியர் உதவியுடன் காந்தியடிகள் பெட்டியினின்று கீழே இறக்கிவிட்டு சாமான்களையும் தூக்கி வெளியில் வீசினான்

காந்தியடிகள் ரயில்வே ஸ்டேஷனிலேயே இரவு முழுவதும் தங்கும்படி நேர்ந்தது. ரயில்வே அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தப் பலனும் ஏற்படவில்லை . நிற வேற்றுமையினால் ஏற்பட்ட துன்பங்களை பல தடவை 

அனுபவிக்க தேர்ந்தது.  இதுபோன்ற நிகழ்சிகளால் நிற வெறியைப் போக்க வேண்டும் எனத் தீர்மானித்தார்

1914-ல் இந்தியா வந்தார்.

மகாத்மா காந்தியடிகள் சத்தியாகிரகத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். 'சத்தியாகிரக ஆசிரமம் என்னும் அறப்போர் நிலையத்தை 1915-ஆம் ஆண்டு ஏற்படுத்தினார்

பம்பாய் மாநிலத்தில் உள்ள கேடா மாவட்டத்தில் 1918-ஆம் ஆண்டு மழை பெய்யாததால் விளைச்சல் இல்லாமல் இருந்தது. மக்கள் செலுத்தும் நில வரியை நிக்குமாறு அரசை வேண்டிக்கொண்டார். அரசு அதை ஏற்க மறுத்துவிட்டது. வரி கொடா இயக்கத்தை மகாத்மா காந்தியடிகள் தொடங்கினார்.

இந்த இயக்கத்தை முறியடிக்க எண்ணிய அரசாங்கம் மக்களின் உரிமையை பறிக்கும் நோக்கத்தில் 'ரௌலட் சட்டத்தை அமல்படுத்தியது. இந்த சட்டத்தின்படி எந்த விசாரனையும் இல்லாமல் எவரையும் கைது செய்யலாம் இந்த சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் ஒவ்வொரு ஊராகச் சென்று சட்டத்தின் கொடுமையை எடுத்துரைத்தார்.

ஜாலியன் வாலாபாக்' என்னும் இடத்தில் அரசின் சட்டத்தை எதிர்த்து கண்டனக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தைக் கலைப்பதற்காக துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் இழந்தனர். இதுவே 'பஞ்சாப் படுகொலை' என வரலாற்று ஏடுகளில் பதிந்தது.

ஒத்துழையாமை இயக்கத்தை 1920- ஆம்.  ஆண்டு மகாத்மா  காந்தியடிகள்  தொடங்கினார்.  நாட்டில்  கிளர்ச்சி 


உண்டாவதைக் கண்டு அரசாங்கம் அதிர்ந்தது. ஆங்கிலேய அரசால் காந்தியடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1928- ஆம் ஆண்டு சைமன் கமிஷனை நியமித்தது. அந்தக் கமிஷனாலும் நாட்டிற்கு நன்மை  ஏற்படவில்லை 

காந்தியடிகள் அறப்போரைத் தொடர்ந்தார். உப்பு சத்தியாகிரகத்தில் காந்தியடிகள் ஈடுபட்டவர். 1930, மார்ச், 12-ஆம் நாள் 'தண்டி' என்னும் இடத்தில் உப்பு சத்தியாக் கிரகம் நடந்தது.

இந்தியாவில் 1937-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் எட்டு மாநிலங்களில் வெற்றி பெற்றது. மதுவிலக்கு மற்றும் ஆலயப்பிரவேசம் போன்ற சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன

1942-ஆம் ஆண்டு ஆகஸ்டு 9-ஆம் நாள் புரட்சி நடந்தது. பம்பாய் கூட்டத்தில் வெள்ளையனே வெளியேறு கோஷம் எழுப்பினார் காந்தியடிகள், தலைவர்கள் சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு. தலைவர்களின் தன்னலம் கருதாத உழைப்பாலும் தியாகத்தாலும் தாய்நாட்டின் சுதந்திரம் தமது லட்சியம் என்று உணர்வு பூர்வமாய் பாடுபட்டதாலும் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றது

ஏழை எளியவர்கள் மேற்சட்டை எதுவும் இல்லாமல் வாழ்வதைக் கண்டு மனம் வருந்தி தானும் சட்டை அணிவதில்லை என உறுதி கொண்டார் மகாத்மா.

ஆமதாபாத் பள்ளி ஒன்றில் ஆண்டு விழாவில் கலந்து கொண்டார் மாணவ, மாணவியர் மகாத்மாவை அன்போடும் உற்சாகத்தோடும் வரவேற்றார்கள். சட்டைஅணியாமல் தோற்றமளித்த காந்தியைக் கண்ட மாணவன் ஒருவன் மிகவும் வருத்தத்துடன், 'சட்டை இல்லாமல் உள்ளீர்கள். என் அம்மாவிடம் சொல்லி நல்ல சட்டை ஒன்று தைத்து எடுத்து வரவா என அன்போடு கேட்டான்

மகாத்மா காந்தி மாணவனிடம் மிகுந்த அன்போடு கோடிக்கணக்கான ஏழைகள் சட்டையில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் சட்டை தைத்து கொண்டுவர முடியுமா? அப்படி இருந்தால் நானும் சட்டை போட்டுக்கொள்ளத் தயாராகிறேன்' எனக் கூறியதும் அந்த சிறுவன் அழுது விட்டான்

சிறுவனிடம் மகாத்மா காந்தி கூறியது போல் தனது வாழ்நாள் முழுவதும் சட்டை போடாமலேயே கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய நாட்டின் தந்தையாகப் போற்றப்படும் மகாத்மா காந்தி, மக்கள் நலனையே தனது நலமாக கருதினார். இந்திய நாட்டின் விடுதலைக்காக அயராது உழைத்த மகாத்மா காந்தி, 1948-ஆம் ஆண்டு , ஜனவரி மாதம் 30-ஆம் நாள் வெறியன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்

உலகம் போற்றும் தலைவராக வாழ்ந்த மகாத்மாவின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்திருக்கும்.




Previous Post Next Post