உயர்தனிச் செம்மொழி

“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் 
வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி 

என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றுவார் பாவலரேறு பெருஞ்சித்திரனார், தமிழ், மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இலக்கிய வளம்மிக்க மொழி, காலத்தால் மூத்த தமிழ் மொழி, தனித்தன்மைகள் மிடுக்குற்றுச் செம்மொழியாய்த் திகழ்கிறது. திருந்திய பண்பும், சீர்த்த  நாகரிகம்  பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்  என்று பரிதிமாற்கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார் தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை வளமை. தாய்மை தூய்மை, மும்மை, , செம்மை, இயன்மை, வியன்மை என வரும் பதினாறு செவ்வியல் தன்மைகளைக்கொண்டது செம்மொழி அதுவே  நம்மொழி  என்பார்  பாவணர் 

நிலைத்த மொழி

உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன என்பர் மொழிநூலார்.

இவற்றுள் இலக்கண, இலக்கிய வளமுடைய மொழிகள் மூவாயிரம், இவற்றுள்ளும் ஈராயிரமாண்டுகட்கும் மேற்பட்ட வரலாற்றுத் தொன்மையுடைய மொழிகள் சிலவே. அவை தமிழ், சீனம், சமற்கிருதம், இலத்தீன், ஈப்ரு,   கிரேக்கம் ஆகியன. இவற்றுள் இலத்தினும் ஈப்ருவும் வழக்கிழந்து போயின. இன்றும் நிலைத்து நிற்கும் மொழிகளும் நம் தமிழ்மொழியும் ஒன்று



ஒரு மொழி நிலைத்து நிற்பதற்கு அதன் பழைமையும்  வளமையும் மட்டும்  போதா  அம்மொழி  பேச்சுமொழியாக, எழுத்துமொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாகப்

பயிற்றுபொழியாக நிலைபெற்றிடல் வேண்டும். இலக்கிய வளம், இலக்கண அரண், மிகுந்த சொல்வளம்,  வரலாற்று  பின்னிணி,  தனித்தியங்கும்  மாண்பு  காலத்திற்கேற்ற  புதுவை எனப் பல வகைகளிலும் சிறப்பைப் பெற்றிருத்தல் வேண்டும். தமிழ் மொழிக்கு இவை அனைத்தும் பொருந்தும்..


செம்மொழித்   தகுதிப்பாடுகள்

1தொன்மை 2. பிறமொழித் தாக்கமின்மை 3, தாய்மை 4. தனித்தம்மை 5. இலக்கிய  வளம். இலக்கணச் சிறப்பு 6. பொதுமை  பண்பு 7.நடுவுநிலைமை 8, பண்பாடு, கலை


பட்டறிவு வெளிப்பாடு 9, உயர் சிந்தனை 10, கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு 11.மொழிக் கோட்பாடு எனப்  பதினொரு  தகுதிக் கோட்பாடுகளை அறிவியல் தமிழறிஞர் முஸ்தபாவும், மொழி  வல்லுநர்களும் வரையறை 


1 தொன்மை

முதல் மாந்தன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், அவன  பேசிய மொழி தமிழ்மொழியே எகின்றனர் ஆய்வாளர். அக் குமரிக்கண்டத்தில் முதல், இடைத்தமிழ்ச்சங்கங்கள் அமைத்துத் தமிழர் மொழியை வளர்த்தனர். இந்நிலப்பகுதி கடற்கோளால் கொள்ளப்பட்டதால், தமிழக சான்றோரால் மூன்றாவது தமிழ் சங்கம் இன்றைய மதுரையில் தோற்றுவிக்கப்பட்டது.

இது மூவாயிரம் ஆண்டுகட்கு முன் நிகழ்ந்து என்பர். உலகம் தோன்றியபோதே தோன்றிய தமிழை, அதன் தொன்மையைக் கருதி என்று முள தென்தமிழ் என்பார் கம்பர்

2 பிறமொழித் தாக்கமின்மை
 
காலச்சூழலே   மொழிக் கலப்பினை ஏற்படுத்துகிறது. ஆங்கிலத்தில் எண்ணற்ற பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன. வடமொழியிலும் தமிழ், பிராகிருதம், பாலி மொழி சொற்கள் கலந்துள்ளன. இவ்வாறு தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்துள்ளன

பிறபொழிச் சொற்களை நீக்கினால் பல மொழிகள் இயங்கா. ஆனால்,  தமிழ்  ஒன்றே  பிறமொழிச்  சொற்களை   நிக்கினாலும் இனிதின்   இயங்கவல்லது. மிகுதியான வேர்ச்சொற்களைக் கொண்ட மொழி, தமிழ், அவ்வேர் சொற்களைக் கொண்டே புத்தம் புதுக் கலைச்சொற்களைத் தமிழ்மொழியால் உருவாக்கிக்கொள்ள இயலும்

3. தாய்மை


தமிழ் மொழியானது திராவிட  மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளுவம்  முதலிய  மொழிகளுக்குத்  தாய் மொழியாகத் திகழ்கிறது. அது பிராகுயி முதலான  வடபுல  மொழிகளுக்கும்  தாய்மொழியாக விளங்குகிறது என்பார் கால்டுவெல், ஆயிரத்தெண்ணாறு  மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும், நூற்றெண்பது மொழிகளுக்கு உறவுப் பெயர்களையும் தந்துள்ளது தமிழ் ஆதலால்,  உலக  மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியாகத் திகழ்கிறது தமிழ் என்பது பெருமைக்குரிய ஒன்று

தனித்தன்மை

இயல், இசை, நாடகம் என்னும் முப்பெரும் பிரிவுகளை கொண்டது தமிழ்

தமிழர் அகம், புறம் என வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்தனர். திருக்குறள், மாந்தர் இனத்திற்கே வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தளித்தது. உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழின் பழைமையையோ அதன் பெருமையையோ எம்மொழியும் நெருங்க இயலாது தமிழ்மொழி இறவா இலக்கிய, இலக்கண வளங்கொண்டு தனக்கெனத் தனிநோக்கும் போக்கும் கொண்டுள்ளது. இவையாவும் தமிழ்மொழியின் தனித்தன்மைகள்

5 இலக்கிய வளம், இலக்கணச் சிறப்பு 

உலக இலக்கியங்களில் முதன்மை பெற்றுள்ளவை சங்க இலக்கியங்கள் அவற்றின் மொத்த அடிகள் 26,350. அக்காலத்தே இவ்வளவிற்கு விரிபாசு உருவாக்கப்பட்ட இலக்கியங்கள், உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை என்பது உலக இலக்கியங்களை ஆய்ந்த கமில் சுவலபில் என்னும் செக் நாட்டு  மொழியியல்  பேரறிஞரின்  முடிவு  


 மாக்சு முல்லர் என்னும் மொழி நூலறிஞரோ தமிழே மிகவும் பண்பட்ட மொழி என்று, அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்றும் பாராட்டியிருக்கின்றார். உலக இலக்கியங்கள் எவற்றிற்கும் இல்லாத தனிச்சிறப்பு, சங்க இலக்கியங்களுக்கு உண்டு. அவை தொன்மக் கருத்துகளின் அடிப்படையில் எழுதாமல் மக்கள் வாழ்வியல் நெறிகளை வெளிப்படுத்தின. ஆதலால், சங்க இலக்கியங்களை மக்கள் இலக்கியம் எனலாம்

தமிழ் மொழியின் இலக்கண அமைப்பானது, தனிச் சிறப்புடையது நுண்ணிய அறிவை உண்டாக்கவல்லது. தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது  என்பார்  கெல்லட்.  நமக்குக் கிடைத்த இலக்கண நூல்களுள் மிகப் பழைமையானது தொல்காப்பியம். இஃது எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்றனுக்கும் இலக்கணம்  கூறுகின்றது. தொல்காப்பியரின் ஆசிரியராகிய அகத்தியர் எழுத்து, சொல், பொருள் யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் எழுதினார். அந்நூலுக்கு அகத்தியம் என்பது பெயர். அறிவியல் முறையில் அமைந்த இத்தகைய இலக்கண நூல்கள் தோன்ற வேண்டும் என்றால், தமிழ் மொழி குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாவது தோன்றிச் செம்மைநிலை பெற்றிருத்தல் வேண்டும். அத்தகைய இலக்கிய இலக்கண வளமுடையது, தமிழ்மொழி

6 பொதுமைப் பண்பு
 
தமிழர், தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்ந்தனர். ஒன்றே குலம் எனப் போற்றினர். தீதும் நன்றும் விளைவது அவரவர் செயலால் என்றுணர்ந்தனர்; செம்புலப் பெயல்நீர்  போல  அன்புள்ளம்.கொண்டானர். இவ்வாறான பொதுமை அறங்களைத் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. அவை உலகத்தில் போற்றப்படுகின்றன

7 நடுவநிலைமை

 சங்க இலக்கியங்கள் இனம், மொழி, மதம்  கடந்தவை; இயற்கையோடு இயைந்தவை, உலகத்தார் ஏற்கும் பொதுக் கருத்துகள் உடையவை மக்கள் சிறப்புடன் வாழ ஏற்ற கருத்துகளை மொழிபவை. 

8 பண்பாடு, கலை பட்டறிவு வெளிப்பாடு  

சங்கப் படைப்புகள் வெறுங் கற்பனைப் படைப்புகள். அவை மனிதப் பட்டறிவின் முழு வெளிப்பாடுகள்: அறிவுடன் பொருந்தி வருவன; அறத்தொடு நிலையாய் நிற்பன. அவை பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் பிறன் மனை நோக்கா பேராண்மை முதலிய பண்பாட்டு நெறிமுறைகளையும் வெளிப்படுத்துகின்றன

9 உயர் சிந்தனை

யாதும் ஊரே, யாரும் கேளிர் என உலக மக்களை ஒன்றிணைத்து உறவுகளாக்கிய உயர் சிந்தனை மிக்கது புறநானூறு.  அஃது உரிமைக்கு உறவுகோல்  ஊன்றுவது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனத் திருக்குறள் உலகுக்கு எடுத்துரைக்கிறது.

அது மக்கட் பண்பில்லாதாரை மரம் எனப் பழக்கிறது. இவையெல்லாம் தமிழ்மொழிக்கே உரிய விழுமிய சிந்தனைகள்.

10 கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு

தமிழ்ச் சான்றோர் மொழியை இயல், இசை, நாடகம் எனப் பிரித்து வளமடையச் செய்தனர்; மேலும், எளிய குடிமகனையும் குடிமகளையும் காப்பியத் தலைவர்களாக்கிக் காப்பியம் படைத்தவர். குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரம், அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும். என்னும் அறநெறியை உலகாள்வோர்க்கு உணர்த்துகிறது. இந்நூல் கூறும் கலை நுட்பச் செய்திகள், சங்ககாலத் தமிழர்களின் கலை, இலக்கியத் தனித்தன்மை களுக்கு சான்றுகளாகத் திகழ்கின்றன

11 மொழிக் கோட்பாடு

 தொல்காப்பியர் கூறும் எழுத்துப் பிறப்புமுறைகள் மொழி   நுலாரையே வியப்பில் ஆழ்த்துகின்றன.இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது) என்பார் முனைவர் எமினோ எக்காலத்திற்கும் பொருந்தும் மொழியியல் கோட்பாடுகளை வகுத்த தமிழர்தம் மொழித்திறம் ஆராயத்தக்கது

நம் தமிழ் மொழியில் உள்ள சொற்கள் மனித உணர்வுகள் அனைத்தையும் எண்ணியவாறு வெளிப்படுத்தப் போதுமானது என்பர் மொழிநூலார்.


தமிழ்மொழி காலப் புதுமையைப் பெறத்தக்க வல்லது; கணினிப் பயன்பாட்டிற்கும்

ஏற்றது

இவ்வாறு, செம்மொழிக்கான பதினொரு கோட்பாடுகளும் முற்றிலும் பொருந்துமாறு அமைந்த ஒரே மொழி தமிழ் மொழி  

இவ்வருஞ்சிறப்புமிக்க தமிழைச் செம்மொழி என அறிவித்தல்வேண்டும் என்ற முயற்சி 1901 இல் தொடங்கி 2004வரை தொடர்ந்தது. நடுவணரசு 2004ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழைச் செம்மொழியாக ஏற்பளித்தது.
Previous Post Next Post