தமிழ்த்தாய் வாழ்த்து


நீராருங்  கடலுடுத்த  நிலமடந்தை கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் 
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரத்தநறுந் திலகமுமே!
அத்திலக  வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற 
எத்திசையும்  புகழ்மணக்க இருந்தபெருந்  தமிழணங்கே! 
                              தமிழணங்கே! 
உன்சீரிளமை திறம்வியந்து செயல்மறந்து  வாழ்த்துதுமே!
                              வாழ்த்துதுமே! 
                              வாழ்த்துதுமே! 
     --மணோன்மணியம் பெ. சுந்தரனார் 


Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post