நாட்டுப் பண்

நாட்டுப் பண்

ஜன கண மன அதிநாயக ஜய ஹே.               பார்த பாக்ய விதாதா
 
பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா.                     திராவிட உத்கல பங்கா

விந்திய ஹிமாசல யமுனா கங்கா                   உச்சல ஜலதி தரங்கா

தவ சுப நாமே ஜாகே
                   தவ சுப ஆசிஸ மாகே
                  காஹே தவ ஜய காதா

ஜன கண மங்கள தாயக ஜய ஹே.                       பாரத பாக்ய விதாதா

 ஜய ஹே ஜய ஹே ஜய ஹே 
                  ஜய ஜய ஜய ஜய ஹே!

       

          -மகாகவி இரவீந்திரநாத தாகூர்


நாட்டுப்பண் - பொருள்

இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய்.

நின் திருப்பெயர் பஞ்சாபையும் சிந்துவையும் கூர்ச்சரத்தையும் மராட்டியத்தையும் திராவிடத்தையும் ஒடிசாவையும் வங்காளத்தையும் உள்ளக் கிளர்ச்சி அடைய செய்கிறது.

நின் திருப்பெயர் விந்திய, இமயமலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது;  யமுனை, கங்கை  ஆறுகளின்  இன்னொலியில் ஒன்றுகிறது. இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது.

அவை நின்னருளை வேண்டுகின்றன, நின் புகழைப் பரவுகின்றன.

இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே உனக்கு

வெற்றி வெற்றி வெற்றி!
        மகாகவி இரவீந்திரநாத தாகூர்

தேசிய கீதம் இயற்றியவர்.               

ரவீந்திரநாத் தாகூர்

முதலில் பாடப்பட்ட நாள் டிசம்பர் 27, 1911. இந்திய இந்திய தேசிய காங்கிரஸின் கல்கத்தா மாநாட்டில் பாடப்பட்டது. 

தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்

ஜனவரி 24, 1950. இந்திய அரசியல் அமைப்பு மூலம்

ஆங்கில மொழிபெயர்ப்பு

1919-ல், ரவீந்திரநாத் தாகூர், 'மார்னிங் சாங் ஆஃப் இந்தியா (இந்தியாவின் அதிகாலை பாடல்) என்ற தலைப்பில் மொழி பெயர்த்தார்

பாட ஆகும் நேரம்.    

             முழுப் பாடலையும் பாட 52 நொடிகள் பிடிக்கும். எனினும் முதல் வரி மற்றும் கடைசி வரி மட்டும் இடம் பெறும் வகை யிலான ஒரு வடிவத்திலும் (20 விநாடிகள்) பாடப்படுவதுண்டு
Previous Post Next Post