பாவேந்தர் பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசன்  இயற்பெயர்  சுப்புரத்தினம் .  இவர், 1891ஆம்  ஆண்டு  ஏப்பிரல்  29 ஆம்  நாள் புதுவைையில் பிறந்தார்.  தந்தை  கனகசபை, தாய் இலக்குமி.
பாரதியின்மேல்  கொண்டாட  பற்றால்  தம்பெயரை  பாரதிதாசன்  என  மாற்றிக்கொண்டார்.  இவர் 
பாவேந்தர், புரட்சிக்கவிங்ஞர் ஆகிய 
சிறப்புபெயரால்  வழங்கப்படுகிறார்
குடும்பவிளக்கு,  இருண்வீடு,  தமிழியக்கம்,  பாண்டியன் பரிசு,  அழகின் சிரிப்பு  முதலியஇவர்தம் படைப்புகளாம் . பாரதிதாசன்  பரம்பரை  என்றொரு கவிஞர் பரம்பரையே  அவர் காலத்தில்   உருவானது. தமிழக அரசு,  பாவேந்தர் படைப்புகளை நாட்டுடைமையாக்கியுள்ளது; ஆண்டு  தோறும்  சிறந்த  கவிஞர்களுக்குப் பாவேந்தர்  விருது  
வழங்கி  வருகிறது; திருச்சராப்பள்ளியில்  பாரதிதாசன்  பெயரில்  பல்கலைக்கழம்  அமைத்துச்  சிறப்புச்  சேர்த்துள்ளது.


பவேந்தரின் மரியாதை  
 புரட்சிக் கவிஞர்  பாரதிதாசனுக்கு 
திருச்சியில் மணி  விழா நடந்தது. 
அந்த  மேடையில்  அமர்ந்து  இருந்தவருக்கு, மகாகவி பாரதியின்  
 மனைவி  செல்லம்மாள்  திருச்சி 
வந்திருப்பதாக ஒரு  தகவல்  வந்தது.
உடனே அவர்  தங்கியிருந்த  விட்டுக்கு நண்பருடன்  பாவேந்தர்  சென்றார். பாவேந்தரை  அடையாளம்  காண  முடியாமல் 
முதலில்  திணறினார்  
செல்லமாள். பின்னர்  அடடே 
பாரதிதாசனா..... நல்லா  
இருக்கியா? ”   என்று  விசாரித்தவர்
“உன்  முரட்டுக்  குணத்தை  எல்லாம்
விட்டுடடியாப்பா?” எனத்  தொடர்ந்தார்.   பாவேந்தர்  கைகளைக்  கட்டியபடியே,  
அதையெல்லாம்  விட்டுட்டேனம்மா.. ”
என்று  பணிவாய்  கூறினார் 
விடைபெற்றபோது,  செல்லமாள்  
பாதங்களில்  நெடுஞ்சாண்கிடையாக  விழுந்து
ஆசி பெற்றார்  
      
     வெளியே  வந்ததும்  உடனிருந்த 
நண்பர்,  “காலில் முள்  குத்தினால்கூட  குனிந்து  எடுப்பதை
தலைகுனிவாக  எண்ணும்  நீங்கள்,
செல்லமாள்  பாதங்களில்  விழுந்து  
வணங்கினீர்களே? ” எனத் கேட்டார். 
“இந்த  நாட்டின்  எல்லாப்  பிணிகளும்
தீர வேண்டும் என  எண்ணியவர்  
பாரதி.  அப்படிப்பட்ட உத்தமசீலரை 
அருகில்.  இருந்து  கவனித்தவர்  இந்த  அம்மையார்.  
அதனால்தான்  விழுந்து  வணங்கினேன்”  என்றார்  பவேந்தர். 
Previous Post Next Post