இந்தியாவின் இரண்டாவது பிரதமராக பதவி ஏற்றவரும், உலகப் புகழ் பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்தம் நிறைவேற்றி இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அமைதி ஏற்படக் காரணமாகவும் இருந்தவர் லால் பகதூர் சாஸ்திரி.
காசிக்கு அருகில் உள்ள முகல்சராய் என்னும் இடத்தில் 1904-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் நாள் லால்பகதூர் சாஸ்திரி பிறந்தார். அவருடைய தாயார் பெயர் இராம்துலாரி தேவி, தந்தையாரின் பெயர் சாரதா பிரசாத், லால் பகதூருக்கு ஒன்றரை வயது இருக்கும் போது அவரது தந்தையார் மரணமடைந்தார்
லால் பகதூர் சாஸ்திரி முகல்சராயில் ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்றார். பத்து வயதுக்குப் பிறகு காசிக்குச் சென்று படித்தார். மிகவும் வறுமை நிலையில் இருந்தது லால் பகதூர் குடும்பம்
லால் பகதூர் சிறிய தந்தையார் இல்லத்தில் தங்கிப் படித்தார். ஏழ்மை நிலையில் இருந்த சிறிய தந்தையார் லால் பகதூரின் கல்விக்கு செலவு செய்ததோடு மட்டுமல்லாமல் அவரை நல்ல முறையில் வளர்க்கவும் செய்தார்.
லால் பகதூர் பள்ளிப்படிப்பில் நடுத்தரமானவராகவே இருந்தார். உருவத்தில் குள்ளமாக இருந்தார். அனை வருடனும் அன்புடன் பழகி வந்தார். லால் பகதூர் காசி வித்தியா பீடத்தில் தத்துவக்கலை பயின்று தேர்ச்சி அடைந்தார். இதற்குப் பின்பே சாஸ்திரி' என்ற பட்டம் பெற்றார். அந்தப் பட்டமே அவருக்குச் சிறப்புப் பெயரானது.
லால் பகதூர் சாஸ்திரி மாணவராக இருந்தபொழுதே விடுதலை வேட்கை கொண்டவராக இருந்தார். ஒத்துழை யாமை இயக்கத்தில் சேர்ந்து அதன் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். தேசிய காங்கிரஸ் இயக்கம் குறித்து மிகுந்த ஆர்வத்துடன் படித்து தெரிந்து கொண்டார்
காங்கிரஸ் பேரவை 1920-ல் நாகபுரியில் ஒத்துழை யாமை இயக்கத்தைத் தோற்றுவித்தது. நகரத்தில் தடை உத்தரவு விதிக்கப்பட்டிருந்தது. அதை மீறி ஊர்வலம் நடத்தியதால் லால் பகதூர் சாஸ்திரி கைது செய்யப்பட்டார்
சாஸ்திரி விடுதலை இயத்தில் சேர்ந்ததால் கல்லூரியில் சேர முடியாமல் போனது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பதவி பறிபோன ஆசிரியர்களுக்காகவும், வெளியேற்றப்பட்ட மாணவாவருக்காகவும் உருவான
கல்விக்கூடமே வித்யா பீடம். லால் பகதூர் அதில் சேர்த்து தான் சாஸ்திரி பட்டம் பெற்றார்
லால் பகதூருக்கு 1927-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் லலிதாதேவி, பெண்ணின் தந்தையாருக்கு, மாப்பிள்ளைக்கு நிறைய பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் லால் பகதூர் வரதட்சணை வாங்கிக்கொள்ள மறுத்து விட்டார்
பெண் வீட்டாரிடமிருந்து ஒரு கை ராட்டையும், சில மீட்டர் கதர் துணியும் வாங்கிக்கொண்டார். அலகாபாத் மாவட்டத்தில் காங்கிரஸ் செயலாளர் பணிபுரிந்தபோது ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது. வரிகொடா இயக்கம் லால் பகதூர் சாஸ்திரியின் தலைமையில் நடந்தது
கிராமந்தோறும் சென்று இயக்கத்தைப் பரப்பியபோது போலீசாரால் கைது செய்யப்பட்டு இரண்டரை ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்தார். தண்டனை அனுபவித்து விட்டு சிறையிலிருந்து வெளியில் வந்த பின்பு சில நாட்களில் மீண்டும் சிறைக்குச் செல்ல நேர்ந்தது
'வெள்ளையனே வெளியேறு' இயக்கம் 1942-ஆம் ஆண்டு நடைபெற்றபோது பல தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். லால் பகதூர் சாஸ்திரி தலைமறைவாக வாழ்ந்தார். கட்சிப் பணிகளில் மிகவும் கவனத்துடன் ஈடுபட்டார்
ஜவஹர்லால் நேரு உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது அதன் செயலாளராக சாஸ்திரி பதவி ஏற்றார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் 1951-ஆம் ஆண்டு நேரு பதவி ஏற்றபோது அதன் பொதுச் செயலாளராக இருந்தார் சாஸ்திரி. ஜவஹரிலால்
நேருவின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களில் முதல் இடத்தைப் பிடித்தவர் சாஸ்திரி இந்தியா 1947-ஆம் ஆண்டு விடுதலை பெற்ற பின்பு உத்தரப்பிரதேச அமைச்சராக சாஸ்திரி பொறுப்பேற்றார்
போலிஸ் துறையும், போக்குவரத்துத் துறையும் சாஸ்திரியின் கட்டுப்பாட்டில் இருந்தன. மக்கள் போற்றும்படி அவரது பணிகள் சிறப்பாக இருந்தது.
1952ஆம் ஆண்டு சாஸ்திரி மத்திய அமைச்சராக பதவி ஏற்றார். இரயில்வே போக்குவரத்து துறை பொறுப்பில் இருந்த சாஸ்திரி, அரியலூர் ரயில் விபத்து ஏற்பட்டபோது அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று தமது அமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்
சாஸ்திரி மீண்டும் 1957-ஆம் ஆண்டு மத்திய அமைச்சரானார். போக்குவரத்துத் துறை மற்றும், வர்த்தகம் தொழில் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார். 1961 ஆம் ஆண்டு உள்துறை மந்திரியானார் சாஸ்திரி. அப்போது அசாமில் நடந்த மொழிக் கலவரம் மற்றும் பஞ்சாபில் ஏற்பட்ட அகாலி கிளர்ச்சியையும் சாஸ்திரி சாமர்த்தியமாய் சமாளித்தார்
சாஸ்திரி தனக்கென சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ளவில்லை. மூத்த தலைவர்கள் தங்களது பதவியைத் துறக்க வேண்டும் என்றும், மக்கள் பணியில் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டது.
அதன்படி சாஸ்திரி பதவி விலகினார்
1964-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் பதவி ஏற்றார். பிரதமர் நேரு மறைந்த பிறகு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், சாஸ்திரிைய பிரதமராக்க பெரும் முயர்சி செய்து அதில் வெற்றி பெற்றார். இந்தியாவின் இரண்டாவது பிரதமராக சாஸ்திரி 1964-ஆம் ஆண்டு பதவி ஏற்றார்
இந்தியா மீது பாகிஸ்தான் திடீரென்று 1965-ஆம் வருடம் படையெடுத்தது. இந்தியப் படைகளின் கடுமையான தாக்குதலுக்கு இலக்கான பாகிஸ்தான் சமாதானத்திற்கு வந்து. சாஸ்திரி தனது பேச்சின் முடிவில் ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்று முழக்கமிட்டார். சாஸ்திரியின் இந்த முழக்கம் நாடு முழுவதும் புகழ் பெற்றது
இந்தியா-பாகிஸ்தான் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பினார் ரஷ்யப் பிரதமர் கோசிஜின். லால் பகதூர் சாஸ்திரியும் பாகிஸ்தான் தலைவர் அயூப்கானும் ரஷ்யாவில் உள்ள தாஷ்கண்ட் என்னும் இடத்திற்குச் சென்றனர். இரண்டு நாட்டுத் தலைவர் களுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டு 1966, ஜனவரி 10-ஆம் நாள் தாஷ்கண்ட் ஒப்பந்தம் நிறைவேறியது
லால் பகதூர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அன்று இரவு நெஞ்சு வலி ஏற்பட்டு சுய நினைவு இழந்தால்
உலகப் புகழ்பெற்ற 'தாஷ்கண்ட் ஒப்பந்தம் நிறைவேற்றி இந்தியா-பாகிஸ்தான் ஒற்றுமைக்கு வித்திட்ட லால் பகதூர் 1966-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ஆம் நாள் இயற்கை எய்தினார். இறப்பிற்குப் பின் இவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது