கோகினூர் வைரம்

பதினெட்டாம்  நூற்றாண்டு  இறுதி வரை, உலகிலேயே அதிக  வைரங்களை உற்பத்தி செய்த நாடு  
எது  தெரியுமா  இந்தியாதான்!   ஆந்திரப்பிரதேசத்தின்  கோல்கொண்டா  பகுதியில்  அமைந்திருந்த வைரச்சுரங்கங்களில்  இருந்து  மிகச்  சிறந்த  வைரங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டனா.  அவற்றில், 13ஆம்  நூற்றாண்டில்  எடுக்கப்பட்ட  புகழ்பெற்ற  'கோகினூர்  வைரமும்'  ஒன்று.  அப்போது அது  சுமார்  அரைக்கிலோ  எடை  இருந்தது.  'மலையளவு  வெளிச்சம்' என்ற  பொருள்  கொண்ட  'கோகினூர் ' என்னும்  பெயரைச்  சூட்டியவர்,  பாரசீக  படையெடுப்  பாளரான நாதிர்ஷா.  அவர் அந்த  வைரத்தை,  டெல்லியில்  அப்போ  ஆட்சியில்  இருந்த  முகலாயப்  பேரரசரிடம்  இருந்து  கைப்பற்றினார் 
     
       அதன் பிறகு  பல  கை  மாறி,   பல நாடுகளைக்  கடந்து. கோகினூர்  வைரம்.  கடைசியாக  இங்கிலாந்தை   அடைந்தது  தற்போது  அது.   அந்நாட்டு  அரசு  கிரீடத்தில்  ஜொலித்துக்  கொண்டிருக்கிறது. கோகினூர் வைரம் ஆண்களுக்கு துரதிர்ஷ்டமானது ஆனால்  பெண்களுக்கு  அதிர்ஷ்டமானது , அதை  அணிந்திருக்கும்  பெண்கள்  உலகை ஆள்வார்கள்  என்று ஒரு   நம்பிக்கை  நிலவுகிறது. 
Previous Post Next Post