பாரதியார்
பிறந்த ஊர்:தூத்துகுடி மாவட்டத்தை சேர்ந்த எட்டையபுரத்தில் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் நாள் பிறந்தார்
பெற்றோர் பெயர் : சின்னசாமி ஐயர் -இலக்குமி அம்மாள்
பாரதிக்கு ஐந்து வயதாக இருக்கும்போதே அவரது தாயார் இயற்கை எய்தினார். இரண்டு வருடங்களுக்குப் பின்பு பாரதியின் தந்தையார் மறுமணம் செய்து கொண்டார்
சமஸ்தானப் புலவர்களின் முன்னிலையில் பாரதி கவி பாடியதைக் கண்டு அவரது திறமையைப் பாராட்டிய எட்டயபுர மன்னர் 'பாரதி' என்ற பட்டத்தை வழங்கினார் அப்போது அவருக்குப் பதினோரு வயதுதான் இருக்கும் 1897-ல் செல்லம்மாள் என்னும் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். 1898-ல் பாரதியாரின் தந்தை இறந்தார் தாய்-தந்தையரை இழந்தபின் உறவினர் உதவியினால் காசியில் உள்ள இந்துக் கல்லூரியில் பயின்றார். பின்பு அலகாபாத்தில் இந்தி மொழியும் சமஸ்கிருத மொழியும் கற்றார்
பல மொழிகளையும் கற்றுத் தேர்ந்த பாரதியார் எல்லா மொழிகளிலும் தலைசிறந்த மொழி தமிழ் மொழியே என பறை சாற்றினார். எட்டயபுர மன்னரின் வேண்டுகோளுக் கிணங்க அரசவைக் கவிஞராய் பொறுப்பேற்றார். சில வருடங்களுக்குப் பிறகு மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்தார்.
சுதேசமித்திரன் பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்த சுப்பிரமணிய ஐயர் மதுரை வந்திருந்தபோது பாரதியாரை சந்தித்தார். சென்னைக்கு வருமாறும் சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியப் பணியைப் பொறுப்பேற்கு மாறும் வேண்டினார். அவரது வேண்டுகோளின்படி சுதேசமித்திரன் பத்திரிகையின் உதவி ஆசிரியரானார்
பாரதியாரின் தீவிர போக்கைக் கண்ட சுப்பிரமணிய ஐயர், இத்தன்மை பத்திரிகைக்கு ஒவ்வாது என நினைத்தார்
இதனால் பாரதியாரே சுதேசமித்திரன் பத்திரிகையிலிருந்து விலகிக் கொண்டார்.
சென்னையில் இந்தியா' என்ற பத்திரிகையின் ஆசிரிய ராகப் பொறுப்பேற்றார். 'பால் பாரதம் என்னும் ஆங்கில இதழையும் நடத்தினார். பாரதியாரின் எழுத்தாற்றலும் கவிநயமும் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன. எதேச்சாதிகாரத்தை எதிர்த்து படைப்புகளைப் பிரசுரித்த 'இந்தியா' பத்திரிகை ஆங்கிலேய அரசுக்கு கோபத்தை உண்டாக்கியது.
பாரதியார் தான் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட இருப்பதை அறிந்து புதுச்சேரிக்குச் சென்று விட்டார். 'இந்தியா' பத்திரிகையை புதுச்சேரியிலிருந்து வெளியிடத் தொடங்கினார்.
விடுதலைப் போராட்டம் குறித்து விழிப்புணர்வை 'இந்தியா' பத்திரிகை மூலம் ஏற்படுத்தியதால் நாட்டில் மிகுந்த வரவேற்பு கிடைத்ததைக் கண்ட அரசு இந்தியா பத்திரிகையைத் தடை செய்தது
ஒருமுறை பாரதியார் எட்டயபுரம் மகாராஜாவோடு சென்னைக்குச் சென்றார். சென்னை சென்று வரும்போது வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி வருமாறு பாரதியாரிடம் அவர் மனைவி செல்லம்மாள் கூறினார்.
சில வாரங்கள் கழித்து பாரதியார் ஊருக்குத் திரும்பினார். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வரவில்லை. சென்னையிலிருந்து நிறைய புத்தகங்களை வாங்கி வந்தார். 'கம்பராமாயணம்': "திருக்குறள்', "சிலப்பதி காரம் போன்ற புத்தகங்களை வாங்கிக் குவித்திருந்தார்
செல்லம்மாள் வியப்போடு பாரதியாரைப் பார்த்தார் பட்டயபுரம் மன்னர் கொடுத்த பணத்தில் மீதி 15 ரூபாய்தான் இருந்தது, "அழியக்கூடிய செல்வத்தைக் கொடுத்துவிட்டு அழியாத கல்வி செல்வத்தை வாங்கிக்கொண்டு வந்திருக்கிறேன். உனக்காக ஒரு புடவையும் வாங்கி வந்திருக்கிறேன்" எனக்கூறி அன்போடு புடவையைக் கொடுத்தார்
பாரதியாரின் மனைவி செல்லம்மாவும் முகமலர்ச்சி போடு புடவையைப் பெற்றுக்கொண்டார்.
பாரதி' என்ற பட்டம் கொடுத்ததும் பாராட்டியதும் காந்திமதிநாயகம் என்பவருக்குப் பிடிக்கவில்லை. சான்றோர் களின் முன்பாக பாரதியாரை அவமானப்படுத்த வேண்டும் என நினைத்தார்
பாரதியாரை ஒரு வெண்பா பாடும்படியும் பாரதி சின்னப்பயல்' என்பதை அதன் ஈற்றடியாக அமைக்குமாறும் காந்திமதிநாயகம் கோரினார்
பாரதியாரால் வெண்பா பாட முடியாது. அப்படியே பாடினாலும் முடிவில் 'பாரதி சின்னப்பயல்' என்றுதானே முடியும். நாம் நினைத்தபடி பாரதிக்கு அவமானம்தான் மிஞ்சும் என நினைத்தார் காந்திமதிநாயகம்.
பாரதியார் வெண்பா பாடினார். பாடலைக்
கீழ்க்கண்டவாறு முடித்திருந்தார்
காந்திமதி நாதனைப் பார்; அதிசின்னப்பயல்'
பாரதியின் பாடலைக் கேட்ட காந்திமதி நாயகம் வெட்கித் தலைகுனிந்தார். பாரதியாரை அவமானப்படுத்த வேண்டும் என நினைத்து தான் அவமானப்பட்டு விட்டோமே என வருந்தினார். 'பாரதி' என்ற பட்டத்தை
அளித்தது பொருத்தமான செயலே என்பதையும் ஒப்புக் கொண்டார்
பாரதியார் 'கண்ணன் பாட்டு', 'குயில் பாட்டு 'பான சாலி சபதம் போன்ற கவிதை நூல்களை எழுதி வெளியிட் டார். பகவத் கீதையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்
பாரதியார் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயி லுக்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாகக் கொண்டி ருந்தார். கோயிலில் உள்ள யானைக்கு தேங்காய், பழம் கொடுத்துவிட்டு துதிக்கையை அன்புடன் வருடிக் கொடுப் பார்
ஒருநாள் பார்த்தசாரதி கோயிலுக்குச் சென்றபோது யானைக்கு வாழைப்பழம் கொடுத்து அதன் அருகில் சென்றார். மதம் கொண்டிருந்த யானை பாரதியாரை துதிக்கையால் தூக்கி வீசியது. இச்சம்பவத்திற்குப் பிறகு உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பாரதியார் ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் நாள் இயற்கை எய்தினார்