வ. உ. சிதம்பரம் பிள்ளை


'வ.உ.சி.'




(வ. உ. சிதம்பரம் பிள்ளை)


                                     ஆங்கிலேயர் ஆட்சியை இந்திய நாட்டை விட்டு விரட்டுவதில் மிகவும் தீவிரமாக இருந்தவர். நாட்டுக்காக வாழ்ந்த தேசபக்தர். 'வ.உ.சி.' என அன்போடு அழைக்கப் பட்ட வ.உ. சிதம்பரனார்,
                                                                 
                                     திருநெல்வேலி மாட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் நாள் பிறந்தார்

                                         
'வ.உ.சி. -யின் பெற்றோர்'

                                          வ.உ.சி. -யின் பெற்றோர்களின் பெயர் உலகநாதன் பிள்ளை பரமாயி அம்மாள். வ.உ.சி. திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஆரம்பக் கல்வி கற்றார். 

                           ஆங்கிலம் கற்பிக்கும் கல்விக்கூடம் ஒட்டப்பிடாரத்தில் இல்லாதபடியால் தனது சொந்த செலவிலேயே ஆங்கிலம் கற்பிக்கும் பள்ளியைத் தனது மகன படிப்பதற்காக ஆரம்பித்தார் வ.உ.சி. -யின் தந்தை அந்தப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த வ.உ.சி தூத்துக்குடி செயின்ட் பிரான்சிஸ் சேவியர் பள்ளியில் சோந்தார். கால்டுவெல் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் தேர்ச்சி பெற்றார்

                                   வ.உ.சி.-க்கு வழக்குரைஞர் படிப்பு படிக்க ஆர்வம் ஏற்படவே அவரது தந்தையார் திருச்சியில் இருந்த அவரது நண்பர்களின் கண்காணிப்பில் சட்டப்படிப்பை மேற் கொள்ள ஏற்பாடு செய்தார். சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று வழக்குரைஞரானார் வ.உ.சி சிவில், கிரிமினல் இரண்டு வழக்குகளையும் வ.உ.சிஏற்று நடத்தினார். 

                    
திருமணம்

                             அவர் வழக்குகளில் வெற்றி பெற்றதால்  வருமானம் உயர்ந்தது. பெற்றோர்கள் வ. உ. சி.-க்குத்திருமணம் செய்து வைத்தனர். 

                      திருச்செந்தூரைச் சேர்ந்த சுப்பிரமணிய பிள்ளை என்பவரின் மகள் வள்ளியம்மை என்ற பெண் வ.உ.சி. -யின் வாழ்க்கைத்துணைவியானார். 

                            தமிழ் இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்த பெண்ணாக வும் அறுசுவை உணவு தயாரிப்பதில் சிறந்த பெண்ணாகவும் வள்ளியம்மை சிறந்து விளங்கினார்.

மனைவியின் முடிவு

                                    திடீரென்று ஏற்பட்ட உடல்நலக் குறைவால் வள்ளியம்மை காலமானார். வ.உ.சி மிகுந்த கவலை அடைந்தார்.

இரண்டம் திருமணம்

                            கால மாற்றத்தினால் வள்ளியம்மையாரின் குடும்பத்திலேயே மீனாட்சி என்ற பெண்ணை வ. உ.சி.-க்குத் திருமணம் செய்து வைத்தனர்.


வெள்ளைக்காரர்கள் நமது நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடிப்பதைக் கண்டார் வ.உ.சி. தூத்துக்குடிக்கும் சிங்கள நாட்டுக்கும் இடையே ஆங்கிலேயர்கள் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நாவிகேஷன்' என்ற நிறுவனத்திலுள்ள கப்பல்களை இயக்கி வியாபாரம் செய்து வந்தனர்.


கப்பல் நிறுவனம்

                   வ.உ.சி. 1906-ஆம் ஆண்டு சுதேசிக் கப்பல் நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தினார். பல வியாபாரிகள் உதவி செய்தனர். சுதேசிக் கப்பல் கம்பெனி பதிவு செய்யப்பட்டது. மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவரும் சேதுபதி சமஸ்தானத்தைச் சேர்ந்த வருமான பாண்டித்துரை தேவர் தலைவர் பொறுப்பையும் வ.உ.சி. செயலாளர் பொறுப்பினையும் ஏற்றனர்.

                             ஆங்கிலேயர்களின் கம்பெனியை எதிர்த்து சுதேசிக் சுப்பல்கள் ஒடுவதைக் கண்ட பிரிட்டிஷ் நிறுவனம் போட்டியிட்டது. தமிழர்கள் சுதேசிக் கப்பலில் பயணம் செய்தார்கள். மக்களின் ஆதரவு தங்களுக்கு இல்லாததைக் கண்ட ஆங்கிலேயர் கட்டணம் இல்லாமல் இலவசமாய் பயணம் செய்ய அழைத்துப் பார்த்தனர். அப்போதும் வெள்ளையர்களின் கப்பலுக்குக் கூட்டம் சேரவில்லை.

                           

                        
போராட்டமும் பொறுப்புனர்வும்

                         வங்காளத்தை இரண்டு பிரிவாகப் பிரித்த ஆங்கிலேயரது ஆட்சியை எதிர்த்து நாடெங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்பைச் சமாளிக்க ஆங்கிலேய அரசு அடக்குமுறைகளை ஏற்படுத்தியது இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்றும், அந்நிய ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்றும் போராடிக் கொண்டிருக்கும் இந்திய தேசிய காங்கிரஸ் மகா சபையில்
சேர்ந்தார் வ.உ.சி கனல் பறக்கும் பேச்சாளரான சுப்பிரமணிய சிவா வ.உ.சி -யுடன் இணைந்தார்.


                                      இருவரும் இணைந்து பொதுக் கூட்டங்களில் பேச வேண்டும் என பொதுமக்கள் வற்புறுத் தியதால் பொதுக்கூட்டங்களில் இருவரும் பேசும்போது மக்கள் கூட்டம் திரண்டிருக்கும். கப்பலோட்டியது முதல் குற்றம்' என்றும், அனுமதி இல்லாமல் கூட்டம் கூட்டியது இரண்டாவது குற்றம்' என்றும் 'வந்தே மாதரம்' என
மக்கள்வாக் கோஷம் போடத் துண்டியது மூன்றாவது குற்றம்  என மூன்று குற்றங்களை சுமத்தி வ.உ.சி. -- யையும்  சிவாயையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

                                      சிதம்பரனார் அரசுக்கு விரோதமாக நடந்து கொண்ட தற்காக இருபது வருடங்களும், சுப்பிரமணிய சிவாவுகம் உடந்தையாக இருந்ததற்காக இருபது வருடங்களும் மொத்தம் நாற்பது வருடங்கள் தண்டனை அளிக்கப்பட்டது சுப்பிரமணிய சிவாவுக்கு பத்தாண்டுகள் தண்டனை அளிக்கப்பட்டது.)

                                       வ.உ.சி. -க்கு வழங்கப்பட்ட கொடுமையான தண்ட எனயைக் கேட்டு இந்தியா முழுவதும் மக்கள் அதிர்ச்சி அடைத்தனர். சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்ததன் பலனாய் முப்பது ஆண்டுகள் குறைத்து பத்து ஆண்டுகள் தண்டனை என உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது

                                    உயர்நீதி மன்றம் அளித்த 10 ஆண்டுகள் தண்டனையை எதிர்ந்து லண்டன் 'பிரின் கௌன்சில் நீதிமன்றத்துக்கு மீண்டும் மேல் முறையீடு செய்தபோது ஆறு வருடம் கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

                                  சிறையில் வ.உ.சி. -வின் கால்களுக்கு இரும்பு விலங்குகள் பூட்டப்பட்டு தலை மொட்டை அடிக்கப் பட்டது. செக்கின் நுகத்தடியை சங்கிலியினால் கட்டி அந்தச் சங்கிலியை இடுப்பில் இறுகக் கட்டி அதைக் கைகளியே பூட்டி அவரை இழுக்க வைத்தனர். மாடு போல செக்கை இழுக்க வைத்தது ஆங்கிலேய அரசு சிறையில் வ.உ.சி அனுபவித்த சித்ரவதைகளும், வேதனைகளும் ஏராளம் இதனால் 'செக்கிழுத்த செம்மல்' என மக்களால் போற்றப்பட்டார்.



                             சிறையிலிருந்து வ.உ.சி. 1912-ஆம் ஆண்டு விடுதலை யானார். சிறையிலிருந்து வெளிவந்த வ.உ.சி.-யை சிறை வாயிலுக்கு வந்து வரவேற்க நண்பர் சுப்பிரமணிய சிவா மட்டுமே வந்திருந்தார் இந்திய நாட்டுக்காக, நாட்டின் சுதந்திரத்திற்காகப்

                          போராடி பொருள்களை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப் பட்டார். வழக்குரைஞர் தொழில் செய்யும் உரிமையைப் பறித்த ஆங்கிலேய அரசிடம் மிகுந்த போராட்டத்திற்கும் முயற்சிக்கும் பின்பு மீண்டும் உரிமை பெற்று வக்கீல் தொழில் செய்ய தூத்துக்குடிக்குச் சென்றார் இந்திய சுதந்திரப் போராட்ட உணர்ச்சிகளால் வ.உ.சி. வறுமை, நோய் இவை இரண்டை மட்டுமே பரிசாகப்பெற்றார்.

                   தேசத் தொண்டாற்றிய வ.உ.சி. தாய்மொழியான தமிழுக்கும் மாபெரும் தொண்டு புரிந்துள்ளார். மதுரை மாநகர் தமிழ்ச் சங்கப் புலவராக விளங்கினார் வ.உ.சி. தமிழ் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் மிகவும் புலமை பெற்றிருந்தார் மெய்யறம்', 'வலிமைக்கு மார்க்கம்', 'வள்ளியம்மைசரித்திரம்' ஆகிய நூல்களை எழுதினார். பதினெண்

                               கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான நன்னிலை' நூலுக்கு எளிய
உரையை எழுதினார் வ.உ.சி. 'மனம் போல வாழ்வு' மற்றும் அகமே புறம் போன்ற நூல்களை மொழிபெயர்த்து எழுதினார்,

                        சுதந்திரத்தைக் காணாமல் கண் மூடுகிறேனே என இறப்பதற்கு முன் வருந்திய வ.உ.சி. தேசியப் பாடல்களைப் பாடுமாறு கூறினார். பாடல்களை பாடிக்கொண்டிருக்கும் போதே வ.உ.சி. இயற்கை எய்தினார். அவர் மறைந்தது ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 10-ஆம் நாளாகும்.


Previous Post Next Post