திருப்பூர் குமரன்


திருப்பூர் குமரன்
           தனது உயிரைவிட தாய் நாட்டின் தேசியக் கொடியை நேசித்து தாய்நாட்டிற்காகத் தன்னுயிரைக் கொடுத்தவர் திருப்பூர் குமரன்.

பிறந்த ஊர்
ஈரோட்டில் உள்ள சென்னிமலை என்ற ஊரில் 1904-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் பிறந்தார் குமரன் என்ற குமாரசாமி, 

         திருப்பூர் குமரன் (கொடிகத்த                                                          குமரன் )

பெற்றோர்களின் பெயர் 

       நாச்சிமுத்து முதலியார் கருப்பாயி அம்மாள். 

திருப்பூர் குமரன் படிப்பு
         படிப்பில் ஆர்வம் இருந்தும் ஏழ்மை நிலையின் காரணமாய் ஆரம்பப்பள்ளி படிப்போடு நிறுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. செங்குந்த மரபில் பிறந்த குமரனுக்கு நெசவுத் தொழிலில் ஈடுபட விருப்பமில்லாமல்இருந்தது. திருப்பூரில் உள்ள பஞ்சு விற்பனை செய்யும் இடத்தில் குமரனுக்கு வேலை கிடைத்தது.

திருப்பூர் குமரன் திருமணம்
குமரனை மணம் செய்து கொள்ளுமாறு பெற்றோர்கள் வற்புறுத்தவே (1923)-ஆம் ஆண்டு குமரனுக்கு திருமணம் இனிதே நடந்தேறியது. அப்போது குமரனுக்கு 19 வயது. அவரது மனைவி ராமாயி அம்மாளுக்கு 14 வயது.
 
குமரன் ஈர்ப்பும்,ஈடுபாடும்
                  இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மகாத்மா காந்தியின் பேச்சும் செயல்களும் வலிமை குமரனை மிகவும் ஈர்த்தது. திருப்பூரில் நடைபெற்று வந்த அரசியல் கூட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டார் அடிமைப்பட்டிருக்கும் இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட வேண்டும் என உறுதி கொண்டார்

காந்தியின் மன உறுதியும்
                 வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மகாத்மா காந்தியடிகள் லண்டனுக்குச் சென்றார். சுதந்திரத்தைப் பெற்று விடலாம் என்ற நோக்கத்தில் சென்றார். ஆங்கிலேய அரசு ஒப்பந்தப்படி நடந்து கொள்ளவில்லை நாடு முழுவதும் அடக்குமுறையும் தடியடியும் நடந்தது காந்தியடிகள் மீண்டும் சத்தியாக்கிரக இயக்கத்தை தொடங்கினார். 

குடும்பத்தின் அறிவுரைகள்

திருப்பூரில் உள்ள இளைஞர் சங்கத்தில் குமரனின் தேசப்பற்றைக் கண்ட அவரது குடும்பத்தினர் வெள்ளையர்களை பகைத்துக்கொள்வதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறினார்கள்

வலிமை உள்ள அரசை எதிர்த்துக்கொண்டால் சிறைத் தண்டனையும், தடியடியும் தான் பலன் கிடைக்கும் என உறவினர்கள் பயமுறுத்தினர். ஆனால் குமரன் எதற்கும் அஞ்சவில்லை. குடும்பத்தைவிட பிறந்த தாய்நாடே முக்கியம் என்றும், நாட்டு நலனையே பெரிதாகக் கருதுகிறேன் எனவும்
கூறிவிட்டார்

இயக்கத்தின் தொடக்கம்

                சட்ட மறுப்பு இயக்கம் (1932)-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 10-ஆம் நாள் நடந்த திட்டமிட்டிருந்தார்கள் தொண்டர்கள் கதர் ஆடையும் கதர் குல்லாயும் அணிந்து அணிவகுத்து நின்று கொண்டிருந்தனர்

 குமரனின் தோற்றமும்,வலிமையும்
         குமரன் பலவீனமான தோற்றத்தைக் கண்ட தலைவர் குமரனை இயக்கத்தில் கலந்து கொள்ள வேண்டாம் எனத் தடுத்தார். ஆனால் குமரன் கேட்கவில்லை. தனக்கு உடல் வலிமையைவிட மன வலிமை அதிகம் உள்ளது எனக் கூறி அணிவகுப்பில் முதல் வரிசையில் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்

 வந்தே மாதரம்
           தொண்டர்கள் கையில் கொடியை ஏந்தியபடி மகாத்மா காந்திக்கு ஜே', 'வந்தே மாதரம்' என முழங்கிய படியே சென்றார்கள். ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக காவலர்கள் வந்தார்

தொண்டர்கள் 'வந்தே மாதரம்' என முழங்கியபடியே சென்றனர். காவலர்கள் தொண்டர்களின் கைகளில் இருந்த கொடியைப் பறித்தபடியே தடியடி நடத்தினர்

தேசப்பற்றும் முடிவும்
             குமரனின் கையில் பிடித்திருந்த கொடியைப் பிடித்து இழுத்த காவலரை குமரன் தள்ளிவிட்டார். கோபம் கொண்ட காவலர்கள் குமரனின் தலையில் ஓங்கி அடிக்கவே குமரனின் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்தது குமரன் அடி தாங்காமல் கீழே விழுந்தார். தனது கைகளில் இருந்த தேசியக் கொடியை இறுகப் பற்றியபடி 'வந்தே மாதரம்' என உச்சரித்துக் கொண்டிருந்தார். படுகாயமடைந்த குமரன் மருத்துவ சிகிச்சை பலன் அளிக்காமல் (1932)-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 11-ஆம் நாள் இயற்கை எய்தினாார்

கொடிகாத்த  குமரன்
         போரட்டத்தின்  போது  தன் தலையில் ஏற்பட்ட காயத்தால் வலி தாங்க முடியாமல்  கிலே விழுந்தார் அந்த நிலையில்  கூட தன் கையில்  இருந்த  கொடியை  கிலே விலாமல்  இருக பற்றிக்கொண்டார்  அன்று  இருந்து  அவரை  கொடிகாத்த  குமரன் என்று அன்போடு  அழைத்தார்கள் 















Previous Post Next Post