வாசுதேவ பல்வந்த் பட்கே

வாசுதேவ பல்வந்த் பட்கே
          சிப்பாய் கலகம் 1857-ஆம் ஆண்டு நடைபெற்றது இந்தக் கலகம் சுதந்திரப் போராட்டத்தின் தொடக்கமாகும் சிப்பாய் கலகத்திற்குப் பிறகு வெள்ளையரை எதிர்த்துப் போராடிய சுதந்திர வீரர் வாசுதேவ் பல்வந்த் பட்கே

பிறப்பு
                  மகாராஷ்டிராவிலுள்ள உள்ள கா்னலா கோட்டையின் தளபதி யாக இருந்த மாவீரரின் பேரன் வாசுதேவ் பல்வந்த் பட்கே, பம்பாய் நகரத்திலுள்ள ஷிர்தான் என்ற ஊரில் 1845 ஆம் ஆண்டு, நவம்பர் 4-ஆம் நாள் பிறந்தார்

    வாசுதேவ பல்வந்த் பட்கே

படிப்பு
      வாசுதேவ் பள்ளிப்படிப்பை பம்பாய், பூனா பள்ளிகளில் படித்தார். பள்ளி இறுதிப் படிப்பைத் தொடர விரும்பாமல்
பள்ளியிலிருந்து வந்துவிட்டார். 

திருமமணமும் ராஜனாமாவும்
      1859-ஆம் ஆண்டு வாசுதேவ் பல்வந்த் பட்கேவுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். வாசுதேவ் ஜி.ஐ.பி. ரயில்வேயிலும் கிராண்ட் மெடிக்கல் கல்லூரியிலும் பணி புரிந்தார். தன்மானம் மிக்கவராக இருந்த வாசுதேவ் மேலதிகாரிகளுடன் ஒத்துப் போக இயலாதபடியால் தான் பார்த்த பணியை ராஜினாமா செய்துவிட்டு ராணுவ பொக்கிஷத் துறையில் சேர்ந்தார்

தாய்யின் நிலமை
வாசுதேவ் பூனாவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது சொந்த ஊரில் தாய் உடல் நலமில்லாமல் இருந்தார். தாயைப் பார்த்து வருவதற்காக விடுப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார் 

ஆங்கிலேயர் அதிகாரம்
            ராணுவ பொக்கிஷத் துறையில் ஆங்கிலேயர்கள் அதிகம் பேர் பணியாற்றி வந்தவர். இந்தியர்களை அடிமை
யாகவும், கேவலமாகவும் கருதி வந்தனர். வாசுதேவ் விடுப்பு
கேட்டதற்கு ஆங்கிலேயே அதிகாரிகள் விடுப்பு அளிக்க
மறுத்தனர்

தாயின் இறப்பு
                     அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறாமல் தன் தாயாரைப் பார்ப்பதற்காக ஊருக்குச் சென்றார். ஆனால் அதற்குள் அவரது தாயார் இறந்து விட்டார்

மனதில் எடுத்த உறுதி
               வெள்ளையர்களின் மனிதாபிமானமற்ற செயல் வாசுதேவ் மனதை மிகவும் வருத்தமடையச் செய்தது. சுதேசி பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உறுதி செய்து அதன்படி வாழத் தொடங்கினார்

இயக்கத்தின் தொடக்கம்
                     வாமனராவ் பாவே என்ற     கல்வியாளருடன் சேர்த்து ஐக்கிய வர்த்தினி சபா' என்றதொரு அமைப்பைத் தொடங்கி னார் வாசுதேவ். தெய்வ பக்தி மிக்கவராக விளங்கிய வாசுதேவ் பல பாடல்களைப் புனைந்து. 1873-ஆம் ஆண்டு

மறுமணம்
வாசுதேவ் மனைவி அகால மரணம் அடைந்தார். தனது குழந்தையை வளர்க்க மறுமணம் செய்து கொண்டார்

இளைஞர்களுக்கு பயிற்சி 
                    வாசுதேவ் உடற்பயிற்சி, மல்யுத்தம், குத்துச்சண்டை வாள் சண்டை குதிரையேற்றம் போன்றவற்றைக் கற்றுக் கொண்டு பல இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்தார் 

ரகசிய சங்கம் 
                       வெள்ளையர்களின் கொடுமைகளைக் கண்டு மனம்
குமுறினார் வாசுதேவ். இளைஞர்களை ஒன்று திரட்டி ரகசிய
சங்கத்தினைத் தோற்றுவித்தார். இந்திய நாட்டின் சுதந்திரத்
திற்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தவர்களின். வாசுதேவ்
செய்த புரட்சிகரமான செயல்கள் ஆங்கிலேய அரசுக்கு
மிகுந்த கோபத்தை உண்டாக்கியது 

ஆங்கில அரசின் அறிவிப்பு 
                               வாசுதேவைப் பிடித்துத் தருபவர்களுக்கு நன்கொடை வழங்கப்படும் என அரசு அறிவித்தது. நூற்றுக்கணக்கான வீரர்களை அனுப்பி வாசுதேவைப் பிடிக்க உத்தரவிட்டது ஆங்கிலேய அரசு. 1879-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வாசுதேவைப் பிடித்து சிறையில் அடைத்தது. சிறையில் பல கொடுமைகளை அனுபவித்ததன் பலனாய் வாசுதேவுக்கு உடல் நலம் குன்றியது.

நாடு கடத்தப்பட்ட வாசுதேவ் 
                      பூனா செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு நடந்தது. வாசுதேவ் நாடு கடத்தப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியது

இறப்பு 
                       ஏடனுக்கு நாடு கடத்தப்பட்ட வாசுதேவ் சிறையில் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டார். சிறையிலிருந்து தப்ப முயன்று முடியாமல் போனது. தாய்நாட்டுக்காகப் போராடிய வீரர். தீவிரமான புரட்சிக்கருத்துகளைக் கொண்ட வாசுதேவ் பல்வந்த் பட்கே 1883-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 17-ஆம் நாள் இயற்கை எய்தினார்
















Previous Post Next Post