வல்லபாய் படேல்

வல்லபாய் பட்டேல் 
                       இரும்பு நெஞ்சம் கொண்ட நேர்மையான மனிதர் என மக்களால் போற்றப்பட்ட விடுதலை வீரர் வல்லபாய் படேல்,

பிறப்பு ,பெற்றேர்கள் 
              குஜராத் மாநிலத்தில் உள்ள நாடியாத் வட்டத்தில் கரம்சந்த் என்னும் ஊரில் 1875-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ஆம் நாள் வல்லபாய் படேல் பிறந்தார். பெற்றோர் களின் பெயர் ஜவேரிபாநய்-இலாத்பாய் அம்மையார்

 கல்வி
                           வல்லபாய் படேல் தான் பிறந்த கிராமத்தில் ஏழாம் வகுப்பு வரையில் குஜராத் மொழியில் படித்தார். உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்த இவர் இங்கிலாந்து சென்று வழக்கறிஞர் கல்வி பயில வேண்டும் என விரும்பினார்

ஆனால் அவரது குடும்பச் சூழ்நிலை அவரது விருப்பத்தை நிறைவேற்ற இயலாமல் இருந்தது. மாவட்ட வழக்கறிஞர் தேர்விற்குப் படித்தார். 1900-ஆம் ஆண்டு வழக்கறிஞர் தேர்வில் வெற்றி பெற்று பட்டம் பெற்றார்
             இங்கிலாந்துக்குச் சென்று பாரிஸ்டர் படிப்பு படிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டார். அவரது விருப்பப்படியே இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் படிப்பில் 1910-ல் முதல்வராகத் தேர்ச்சி அடைந்தார்

வாழ்கை  திருப்பங்கள்
                              படேல் பல வழக்குகளில் வெற்றி பெற்றதால் வருமானம் உயர்ந்தது. வல்லபாய் படேலுக்கும் ஜாவர்பா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இரண்டு குழந்தைகள் பிறந்தனர். எதிர்பாராதவிதமாய் ஜாவர்பா அம்மையாருக்கு உடல் நலம் குன்றியது. சிறந்த முறையில் சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கவில்லை. வல்லபாய் படேலின் மனைவி இறந்தார். இரண்டாம் திருமணம் செய்து கொள்வதை அவர் விரும்பவில்லை


எளிமையாக மாறக்காரணம்
                                    பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியா வந்தபின்பு வல்லபாய் படேல் வக்கீல் தொழிலைத் தொடங்கினார் வழக்கறிஞர் தொழிலில் பேரும் புகழும் பெற்றதோடு பொருளாதார நிலையிலும் உயர்ந்தார். ஆடம்பரமாக வாழ்ந்த வல்லபாய் படேல் காந்தியடிகளை சந்தித்த பிறகு எளிய வாழ்க்கையை மேற்கொண்டார்

அறப்போறட்டத்தின் வெற்றி
                      குஜராத் மாநிலத்தில் உள்ள கேடா என்னும் மாவட்டத்தில் விளைச்சல் இல்லாமல் தவித்த விவசாயிகள் நிலவரி செலுத்தியாக வேண்டும் என அரசாங்கம் ஆணையிட்டது. காந்தியடிகள் இக்கொடுமையை எதிர்த்து அறப்போர் நடத்தினார்
                      வல்லபாய் படேல் கிராமந்தோறும் சென்று பிரசாரம் செய்தார். விவசாயிகளும் பொது மக்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதற்குப் பின்பு அரசு தனது போக்கை மாற்றிக்கொண்டது. நிலவரி செலுத்த வேண்டாம் என்று உத்தரவிட்டது

காந்தியடிகள் கூற்று
                 ஒத்துழையாமை இயக்கத்தை மகாத்மா காந்தி 1920 ஆம் ஆண்டு நடத்தினார். இந்தியர்களின் விருப்பத்திற்கு எதிராக இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் ஒத்துழைக்க மறுக்க வேண்டும் என்பது காந்தியடிகள் கூற்று
                              ஆங்கிலேய அரசின் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது என்றும், அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்குச் செல்லக்கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது

காந்தியடிகளின் கருத்து
                                       அந்நியப் பொருட்களை வாங்கக்கூடாது என்று முடிவு செய்தனர். இப்படிச் செய்வதால் ஆங்கிலேய அரசு அடக்குமுறையை ஏற்படுத்தும். இந்தியர்கள் வன்முறையை மேற்கொள்ளாமல் அமைதியாக இருந்தால் சத்தியத்தின் வலிமை வெள்ளையர்களின் மதம் மாற்றச் செய்யும் என்பது காந்தியடிகளின் கருத்தாகும்


ஒத்துழையாமை இயக்கம்
       வல்லபாய் படேல் ஒத்துழையாமை.    இயக்கத்தை பெரிதும் மதித்தார். தாம் மேற்கொண்டிருந்த வழக்கறிஞர் தொழிலை கைவிட்டார். ஒத்துழையாமை இயக்கத்திற்கு தலைமை தாங்கிய காந்தியடிகள் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டதும்  படேல் குஜராத் மாநிலத்தில் ஒத்துழை யாமை இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார்

நிலவரியின்  நிறுத்தம் 
குஜராத் மாநிலத்தில் பர்தோலி வட்டத்தில் உள்ள ஏழை விவசாயிகள் நிலவரி செலுத்த முடியாமல் தவித்தனர்

வரியின் அளவை அரசாங்கம் உயர்த்தியதால் விவசாயிகள் தங்களது பொருள்களையெல்லாம் விற்க நேர்ந்தது. படேலி டத்தில் விவசாயிகள் தங்களது குறைகளை எடுத்துரைத்தனர். கிராமங்கள் தோறும் சென்று விவசாயிகளிடம் வரி செலுத்த வேண்டாம் எனக் கூறி வந்தார்

வரி கொடா இயக்கத்தினால் வல்லபாயின் திறமையை நாடறிந்தது. அரசாங்கத்தின் அடக்குமுறையை எண்ணி அஞ்சாமல் விவசாயிகள் மிகவும் பொறுமையாக இருந்தார்கள். முடிவில் அரசாங்கம் புதிய வரி விதிப்பை நிறுத்திக் கொண்டது. கைப்பற்றிய நிலங்களை விவசாயம் களிடம் திருப்பி அளித்தது

பர்தோலி சத்தியாக்கிரகத்தின் மூலம் வல்லபாயின் திறமையும் அறிவாற்றலும் வெளிப்பட்டது. மக்களால் சர்தார்.. அதாவது 'தலைவர்' என அன்போடு அழைக்கப் பட்டார்.

ஏரவாடா சிறையில்
                            காந்தியடிகளும் படேலும் கைது      செய்யப்பட்டு எரவாடா சிறையில் இருந்தபோது நடந்த சம்பவம் இது 

சுதந்திரத்திற்காகப் போராடிய வல்லபாய் படேலின் சகோதரர் வித்தல்பாயை ஆங்கிலேயே அரசாங்கம் சிறையில் அடைத்தது. வித்தல்பாய் படேல் உடல் நலமின்றி
கஷ்டப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
வித்தல்பாய் படேல் மரணமடைந்தார்

அண்ணன் மரணம், ஆங்கில  அரசின் நிபந்தனை
தமையனார் இறந்த செய்தியைக் கேட்டு வல்லபாய் மனம் உடைந்து போனார். தமையனாரின் ஈமச்சடங்குகளை வல்லபாய் செய்வதற்கு ஆங்கிலேய அரசு நிபந்தனை விதித்தது. ஈமக்கடன் முடித்ததும் சிறைக்குத் திரும்ப வேண்டும் என்றும், சிறையை விட்டு வெளியில் சென்றபின்

அரசியல் பணியில் ஈடுபடக்கூடாது எனவும் அதற்கு உறுதிமொழி தரவேண்டும் என்றும் வற்புறுத்தியது

படேல்லின் இலட்சியம்
                            அரசாங்கத்திற்கு அடிபணியக் கூடாது என்பதை லட்சியமாகக் கொண்டிருந்த படேல் அரசின் நிபந்தனை ஏற்றுக்கொள்ள மறுத்தார். எந்த நிபந்தனையும் இல்லாமல் சிறையை விட்டு செல்ல கேட்டுக்கொண்டார். ஆனால் அதற்கு அரசு மறுப்பு தெரிவித்து விட்டது. 

தனது அண்ணனுக்கு ஈமக்கடன்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொண்டு மனதை இரும்பாக்கும் கொண்டார்

மனைவியின் இறப்பு 
            நீதிமன்றத்தில் முக்கியமான வழக்கு ஒன்றில் வல்லபாய் படேல் வாதாடிக் கொண்டிருந்தார் அப்போது படேலுக்கு தந்தி ஒன்று வந்தது. அவரது மனைவி இறந்து போய் விட்டதாக அந்த தந்தியில் செய்தி இருந்ததைக் கண்டு இடிந்து போனார்

வழக்கை பாதியில் நிறுத்தி விட்டால் தன்னை நம்பிய கட்சிக்காரருக்கு பாதிப்பு ஏற்படுமே என நினைத்து தொடர்ந்து வாதாடினார். வழக்கு முடிந்த பிறகு தந்தியில் உள்ள செய்தியை கேள்விப்பட்டதும் கூடியிருந்த நண்பர்கள் அதிர்ந்து போனார்கள். வல்லபாயின் கடமை உணர்வும் மன வலிமையும் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இரும்பு மனிதர்' என்ற பெயர் ஏற்பட்டதற்கு இதுபோன்ற சம்பவங்கள்தான் காரணமாக இருந்தது
  
வலிமையான இந்தியா  உருவாக்கம்
                   1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ஆம் நாள் இந்தியா விடுதலை அடைந்தது. அப்போது இந்தியாவில் 500 க்கும் அதிகமான சமஸ்தானங்கள் இருந்தன. மன்னர்கள் ஆண்டு வந்த அந்த சமஸ்தானங்கள் இந்தியாவில் இருந்தால்


இந்தியா வலிமையற்ற நாடாக ஆகிவிடும் எனக் கருதி சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என வல்லபாய் படேல் முடிவு எடுத்தார்

வல்லபாயின் தீவிர முயற்சியின் பலனாய் சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்தன. 

       வல்லபாய் படேல் பெருமைப்படுத்த நினைத்த அகமதாபாத் மக்கள் அவரது 75 வது பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாடி 15 லட்ச ரூபாய் பண முடிப்பை வழங்கினார்கள், படேல் அந்தப் பணத்தை பொது நிதிக்குக் கொடுத்தார்

 மறைவு
                இந்திய நாட்டிற்கு பணி செய்வதையே தன் கடமை எனக் கருதிய வல்லபாய் படேல் 1950-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ஆம் நாள் இவ்வுலகை விட்டு மறைந்தார்

1991ஆம் ஆண்டு இவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்
பட்டது

     மத்திய  அரசு  வல்லபாய் படேல்  அவர்களை  போற்றும் வகையில் உலகிலேயே மிக உயரமான சிலையாக குஜராத்தில் வல்லபாய் படேலின் அவர்களின்   சிலை நிறுவப்பட்டது, 

சிலையின் சிறப்பு            
           1.இந்த சிலையின் மொத்த உயரம்  787 அடி சிலை பீடத்தின்  உயரம்  190 அடி 
     # கால் முதல் தலை வரை உள்ள உயரம் 597

 #இந்த சிலை நர்மதை  ஆற்றின்  நடுவே அமைந்துள்ளது 

சிலை அமைந்துள்ள  இடம்  குஜராத்  அருகே வதேதரா  அருகே (sardaar  sarovar)  இருந்து 3.2 Km   துரத்தில்  செயற்கையாக உருவாக்கப்பட்ட  சாதுர்பெட் திவில்  சிலை அமைந்துள்ள 
  
சிலைக்கு தேவையான பொருள் மற்றும் அளவு
      
        *சிமெண்ட்.      -  70,000 டன்
        *இரும்மபு.          -18500டன்
         *பித்தலை.         -1700டன்
    
   இந்த சிலையனது  220Km   வேகத்தில் விசகூடிய காற்றை தாங்ககூடியது மற்றும் 6.5 ரிக்டர்  அளவிலான நிலநடுக்கத்தையும்  தாங்ககூடியது  
        
      அடித்தளத்தில் கண்காட்சி  அரங்கம், நினைவுப்பூங்கா மற்றும் உணவு கூடங்கள்  அமைந்துள்ளன  
   
       இந்த சிலையின் பெயர் ஒற்றுமையின்  சிலை என  பெயர்சூட்டப்பட்டுள்ளது 




















Previous Post Next Post