இராசேந்திரன் பிரசாத்

இராசேந்திரன் பிரசாத் 
பிறப்பு
                   பீகார் மாநிலத்தில் சாரண் என்னும் மாவட்டத்தில் ஜீராரேயி என்ற கிராமத்தில் 1884-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 3-ஆம் நாள் இராசேந்திர பிரசாத் பிறந்தார்


கல்வி
               தமது ஐந்தாவது வயதிலேயே பாரசீக மொழி கற்றுக்கொண்டார். தொடக்கக் கல்வி கற்ற பின் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து கல்வி கற்றுக்கொண்டார். கல்கத்தா மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. படித்தார். பின்பு எம்.ஏ படித்து தேர்ச்சி பெற்று, பி.எல். பட்டம் பெற்றார்

இராசேந்திர பிரசாத் இளம் பருவத்திலிருந்தே பொதுநலத் தொண்டில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார்



  சங்கத்தோற்றம் 
பீகார் மாணவர் சங்கம்' என்ற அமைப்பினை இராசேந்திரர் தொடங்கினார். மக்களுக்குத் தொண்டு புரிவதே மனிதனின் கடமை என்பதை உணர்ந்து மக்களுக்குத் தொண்டு புரிந்தவர்

குடும்ப வருமை
             இராசேந்திர பிரசாத் இங்கிலாந்து.   சென்று ஐ.சி.எஸ் தேர்வில் வெற்றி அடைய வேண்டும் என ஆசைப்பட்டார் ஆனால் அயல்நாடு செல்வதை பெற்றோர்கள் விரும்ப வில்லை. குடும்பம் வறுமையான சூழ்நிலையில் இருந்ததால் தனது முடிவை மாற்றிக்கொண்டார். கல்லூரி ஒன்றில் பேராசிரியர் வேலையில் அமர்ந்தார். சில வருடங்கள் கழித்து கல்கத்தா சென்று சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டார்

திறமையின் பரிசு
       இராசேந்திர பிரசாத்தின் திறமையை வியந்து பாராட்டிய கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்த ராக இருந்த அசுதோஷ் முகர்ஜி இராசேந்திர பிரசாத்துக்கு சட்டப் பேராசிரியர் பதவியை வழங்கினார்

வழக்கறிஞராக
உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக 1911-ஆம் ஆண்டு முதல் 1916-ஆம் ஆண்டு வரை தொழில் புரிந்தார் வழக்கறிஞராக இருந்து கொண்டே எம்.எல். தேர்வில் வெற்றி பெற்றார். பின்பு டாக்டர் பட்டம் பெற்ற இராசேந்திர பிரசாத்தின் குடும்பத்தின் பொருளாதார நிலை உயர்ந்தது

அகில இந்திய காங்கிரசில் 1912-ஆம் ஆண்டு உறுப் பினராகச் சேர்ந்து பணிபுரிந்தார். காங்கிரசின் பொதுச் செயலாளராகவும் இராசேந்திர பிரசாத் பொறுப்பேற்றுள்ளார்


காந்தி காட்டிய வழி
ரௌலட் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற கிளர்ச்சியில் இராசேந்திர பிரசாத் கலந்து கொண்டார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் காங்கிரஸ் மகாசபையின் அனுமதி பெற்றது. வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்ட இராசேந்திர பிரசாத் காந்தி காட்டிய வழியில் நடக்க ஆரம்பித்தார்



தன்னலம் கருதாமல் பாட்டு தலையே பிரதானமாகக் கருதினார்

இராசேந்திர பிரசாத் நாடெங்கும் மாநாடுகள் நடத்தி ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றி குறித்த அறிக்கைகள் படிக்க வேண்டும் என முடிவு செய்தார். மாநாடு நடத்தப் பட்டது. கூட்டத்திற்குத் தடை விதிக்கப்பட்டபடியால் தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர் இராசேந்திர பிரசாத் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. காச நோயால் கஷ்டப்பட்டார். மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டார் பின்பு விடுதலையானார்

“வெள்ளையனே வெளியேறு' இயக்கம் தொடங்கியதும் ஆங்கில அரசு கவலை கொண்டு அனைவரையும் சிறையில் அடைத்தது. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தபோதிலும் இராசேந்திர பிரசாத் கைது செய்து சிறையில் அடைத்தது ஆங்கிலேய அரசு 

மவுண்ட்பேட்டன் 1947-ஆம் ஆண்டு இந்தியாவின்

இராஜேந்திர பிரசாத் ஜனாதிபதியாக
வைசிராய் பொறுப்பேற்றார். பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில்1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18-ஆம் நாள் இந்திய உரிமைச் சட்டம் உருவானது. 1949-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் நாள் இந்தியக் குடியரசு அரசியல் அமைப்பு தயாரிக்கப்பட்டது. 1950-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ஆம் நாள் முதல் இந்தியா முழு உரிமை பெற்ற குடியரசு நாடானது. இராஜேந்திர பிரசாத் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர். 

பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஜனாதிபதி பதவி வகித்த

இறப்பு
               இராசேந்திர பிரசாத் 1963-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்



















Previous Post Next Post